Viser resultater for "sandilyan"
Viser 1 - 12 af 71 resultater
Voksenindhold er synligt.
2025
TA
அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக் கூர்ந்து நோக்கினான்.சுங்க அதிகாரியின் விழிகளில் கோபமே அதிகரித்தது. "விலையைச்...
31,38 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
இளமதி சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்துத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரே ஒரு முத்தாரத்தைக் கையால் நெருடினாள். அப்படி முத்தா ரத்தை அவள் நெருடியிராவிட்டால் அந்த வாலிபனும் அவளை நோக்கி வாயைப் பிளந்திருக்க மாட்டான். நிலை குத்திய கண்களுடன் நின்றிருக்கவும் மாட்டான், முத்தாரம் வளைந்து கிடந்த இளமதியின் செக்கச் செவேலென்ற கழுத்து அந்த வாலிபனைத் திகைக்க வைத்தது. அவள் நெருடிய விரல்களின் அழகும் முத்தாரத்தைப் படியவொட்டாமல் எழுப்பி நிறுத்திய மார்பகத்தின் இருபகுதிகளும் அவனைப் பிரமிக்க அடித்திருந்...
31,38 kr.
eller Gratis med Kobo PlusUforkortet
27 timer 39 min
2022
TA
இந்நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் கடற்கரை அரங்கன் கோவில் கட்டப்பட்டது பற்றியது. அவற்றில் பொதிந்துள்ள சிற்பச் செல்வங்களையும், அவற்றைச் செதுக்கிய ராஜசிம்ம பல்லவன் என்ற அரச சிற்பியைப் பற்றியும், அவனது அரசிகளான ரங்கபாதகதேவி, மைவிழி செல்வி பற்றியும் இந்நூல் மேலும் விவரிக்கிறது. This book is about the construction of Kanchi Kailasa Nath Temple and Mamallapuram Beach Arangan Temple. This book further describes the sculptural riches embedded in them, the royal sculptor named Ra...
Old Price:189,00 kr. Sale Price:139,00 kr.
2025
TA
பெரியவர் அவனை ஏறெடுத்துப் பார்த்து, "தம்பி! வாழ்க்கையில் வாளுக்கு வேலை குறைவேயில்லை. மனிதர்களுக்கு ஆசையிருக்கும் வரையில் சச்சரவு உண்டு. சச்சரவிருக்கும் வரையில் போர்க்கருவிகளுக்கு வேலை உண்டு. அதுவும் கொந்தளிக்கும் நிலைமையிலுள்ள இந்தப் பாரத பூமியில் உன் வாளுக்கென்ன, புத்திக்கும் நிறைய வேலை கிடைக்கும். கௌடில்யனுடைய அர்த்தசாஸ்திரத்தைப் பூராவாகப் படித்திருக்கும் உனக்கு, ராஜதந்திரத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. புராணங்களைத் தலைகீழாக அலசவல்ல உனக்குப் போர்த்தந்திரங்களும் புதிதல்ல. ய...
43,96 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
கவர்னர் இதை எதற்காகச் சொல்கிறார் என்பதை அறியாததால் கிளைவ் மௌனம் சாதித்தான் சில விநாடிகள். கவர்னர் கை அவன் தோளை இரும்பாகப் பிடித்த போதிலும் அதிலும் அன்பிருந்தது. "காப்டன்! நமது கடல் வாழ்வு சிறந்தது ஸர் வால்டரால்.நில வாழ்வு உன்னால் சிறக்கப் போகிறது" என்று கூறினார் கவர்னர்.கிளைவ் நன்றி ததும்பும் கண்களை அவர்மீது நாட்டினான். "ஐ ஆம் ஆனர்ட்" என்றும் சொன்னான் பணிவுடன்."கிளைவ்!" என்றார் கவர்னர், இருமுறை அவன் ராணுவப் பட்டத்தைவிட்டு."எஸ் யுவர் எக்ஸலன்ஸி!" என்றான் கிளைவ்.
18,86 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
அந்தக் கோபுர உச்சி தீபத்தை நீண்டநேரம் பார்த்து விட்டு அக்கம் பக்கத்தையும் பார்த்த இதயவர்மன், நள்ளிரவிலும் நடமாட்டம் இருந்த அந்த ராஜவீதியைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். உச்சிகால மணி அடித்து விட்டதால் தூரத்தே தெரிந்த சக்கரவர்த்தியின் அரண்மனையில் காவல் மாறியதன் காரணமாகச் சில விநாடிகளே நின்ற காவல் வீரர்களின் எச்சரிக்கைக் கோஷம் மீண்டும் துவங்கிவிட்டதையும், அந்தக் கோஷம் துவங்குவதற்கு முன்பே அடங்க வேண்டிய இதர அரசமாளிகைகளில் கூட நடன, இசை ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்ததையும் காதில் வாங்கிய இதயவர்மன், "இந்...
18,86 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
"இகபர செல்வங்களுக்கெல்லாம் இருப்பிடமான கச்சியம்பதி இன்னும் எத்தனை தூரந்தான் இருக்கும்?" என்று நீண்ட பயணத்தினால் அலுத்துக் கொண்ட அந்த வாலிபன், அடர்ந்த கானகத்துக்குள்ளும் நுழைந்த அந்திக் கதிரவனை, மரக்கிளைகளின் ஊடே தெரிந்த இடைவெளி மூலமாகப் பார்க்கப் பிரயாசைப்பட்டான். ஆனாலும் முழுக்கதிரவனும் தெரியாததால் கதிரவனிடமும் சிறிது சீற்றங்கொண்டான். "காட்டை அழித்து நாட்டைப் படைத்ததால் காடவர் என்று பிரசித்து பெற்ற ஆதி பல்லவர் இந்தக் காட்டை மட்டும் ஏன் அழிக்கவில்லை?" என்று மறைந்துவிட்ட அந்தப் பழைய குடிகளை...
31,38 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
ஆராவலி மலைத்தொடரின் முன்பாக நின்ற சமயத்தில் கூட ரவிசந்துக்கு அந்தப் பழைய சம்பவம் நினைவுக்கு வந்ததால் அவன் ஒரு முறை புன்முறுவல் கொண்டு துணியால் புரவியின் உடல் முழுவதையும் துடைத்துவிட்டு "வா சந்தர், கிரகப் பிரவேசம் செய்வோம்" என்று அழைத்து விட்டு கடிவாளத்தை அதன்மீது எறிந்துவிட்டு மலையில் ஏறத்துவங்கினான். மாலை முற்றி இருள் புகத்துவங்கியபடியால் காடு மிகவும் கருமையாகவே தெரிந்தது. அன்று அமாவாசை கழிந்த ஐந்தாம் நாளாகையால் பிறைச்சந்திரன் சிறிதே வளர்ந்து மங்கலான நிலவை காட்டுக்குள் மெல்ல மெல்ல அனுப்பல...
25,09 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
அந்தக் கதையை நினைக்கவே பேரின்பமாயிருந்தது பாண்டியன் பத்தினிக்கு. அங்கு காட்டிலும் கடற்கரை மணல் மேட்டிலும் தன்னை எப்படியெல்லாம் புரட்டினான் தனது கணவன் என்பதை நினைத்துப் பார்த்த வானவன்மகாதேவி, "உங்கள் திறமைகளையெல்லாம் தென்பாண்டிச்சீமையில் தான் பார்த்துவிட்டேனே" என்றாள். நாணத்தால் தலை குனிந்தாள்.அந்த விளையாட்டையெல்லாம் நினைத்த பராந்தகனும் இவ்வுலகை மறந்து தனது புது மனைவியை, பிற்கால பாண்டிய ராணியை பஞ்சணையில் சிறிது நகர்த்தி உட்காரவைத்து அவள் மடியில் தனது தலையை வைத்துப்படுத்தான். பிறகு அ...
18,80 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
இரு கரைகளிலும் இருந்த வீடுகளில் ஏதோ ஓரிரண்டில் சிறு விளக்குகள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. அப்பொழுது அமாவாசையாகையால் இருள் தனது ஆட்சியைப் பரிபூர்ணமாகச் செலுத்திக் கொண்டிருந்தது.அந்தப் பெண் இருளைச் சிறிதும் இலட்சியம் செய்யாமல் தோணியை ஆற்றின் வேகம் பார்த்துக் குறுக்கே செலுத்திக்கொண்டிருந்தாள். அவள் தோணியோட்டும் திறனை வியந்த அந்த வாலிபன். கேட்டான், "பெண்ணே! இந்த ஆற்றை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறாய் போலிருக்கிறது!" என்று."தாயை மகள் புரிந்துகொள்வது கஷ்டமா?" என்று வினவின...
12,51 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
கப்பலில் அரவம் அடியோடு அடங்கிவிட்டதால் எரித்திரியன் கடலில் சூழ்நிலை மிகப் பயங்கரமாகி விட்டது. ஏதோ 'ஹோ'வென்று பெரும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சுழற்றியடித்த தென்மேற்குப் பருவக் காற்றுக் கூட இடையிடையே ஊதி ஊதிச் சப்தம் செய்து ஊழிக் காற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்குச் சான்று காட்டியது. அந்த ஊதல் காற்றுக்கிடையே மிதந்து வருபவனைப்போல் ஓசைப்படாமல் வந்து இளஞ்செழியன் பக்கத்தில் நின்று கொண்ட ஹிப்பலாஸ், "பிரபு! திரும்பிக் கடலைக் குனிந்து பாருங்கள்" என்றான்.அந்த எச்சரிக்கையின் க...
37,67 kr.
eller Gratis med Kobo Plus2025
TA
சத்ருஞ்சயன் முகத்தில் வியப்பு விரிந்தது "மேவார் ராணா பெண் கேட்டாலே போதுமே, அவருக்கு யார் பெண் கொடுக்க மறுக்க முடியும்? பெரிய பதவி அல்லவா மகாராணி பதவி!" என்று வினவினான் வியப்பின் ஊடே.தந்தையின் முகத்தில் வருத்தத்தின் சாயை படர்ந்தது. "இருமுறை பெண் கேட்டு அனுப்பினோம். ஒரு முறை அவள் இரு வளையல்களை அனுப்பினாள். இரண்டாவது முறை சேலை ஒன்றை அனுப்பினாள். இதில் ஏதாவது ஓர் அவமானத்திற்கே ஒண்டாலா மீது போர் துவக்கியிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் இறுமாப்பை நாட்டின் நலனை முன்னிட்டுச் சகித்துக் கொண...
18,80 kr.
eller Gratis med Kobo Plus










